Jul 6, 2009

"மடத்” தமிழர்

தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம்

திசையெட்டும் திரிந்து நா வளர்த்த

மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு

வழமையான ரசம்தான்

என் ரசம் அலாதி

அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி

கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய

எரும

உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண

சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு

உப்பில்லாத பண்டம் குப்பையிலே

எவரோ சொன்னது

பழந்தமிழர் வீரமறவராம்

இருக்கலாம்

மற்றவர்க்கு எப்படியோ

எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு.


11.02.94


குறிப்பு:


கவிதை எழுத ஆரம்பித்த புதிதில் ‘கவிதை மாதிரி' எழுதி வைத்தது. ஈழம் குறித்து தற்போது எழுதப்பட்டு வரும் ஆகக்கேடான விஷயங்கள் குறித்து எழுத உட்கார்ந்து புரட்டிக் கொண்டிருந்ததில் கண்ணில் பட்டது. கணிசமான மாற்றங்களுடன் திருத்தி எழுதி பதிவில்.


“மடையன்” என்பதற்கு சமையல்காரன் என்ற பொருளும் உண்டு.

2 comments:

கென்., said...

என்னதான் கவிதை எழுதினாலும் நான் பிக்ஸன் ஆசாமி என்பதை நாங்கள் மாற்றிக்கொள்ள போவதில்லை :)

டிசே த‌மிழ‌ன் said...

வ‌ள‌ர்,
நான் இப்போது 'ந‌மோ ந‌மோ சிறில‌ங்கா தாயே' பாடிக்கொண்டிருப்ப‌தால் நானொரு 'ம‌ட‌'த்த‌மிழ‌ராய் இருப்ப‌த‌ற்கான‌ த‌குதியை இழ‌ந்துவிட்டேனென‌ நினைக்கின்றேன்.

ம‌ற்ற‌து என‌க்கான‌ க‌ல‌க‌மென்ப‌து நான் க‌ன‌டாவிலோ, ஜ‌ரோப்பாவிலோ, த‌மிழ‌க‌த்திலோ 'தேசிய‌க் கீத‌த்தை'ப் பாடுவ‌த‌ல்ல‌. ராஜ‌ப‌க்சாவின் அர‌ண்ம‌னையில் நெஞ்சு நிமிர்த்திப் பாடுவ‌தென்ப‌தால் விரைவில் ம‌கிந்த ச‌கோத‌ர‌ர்க‌ளின் அழைப்புக்காய்க் காத்துக்கொண்டிருக்கின்றேன்.

Post a Comment

Recent Posts