Jan 25, 2009

இலங்கையில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு???!!!

இன்று மதியத்திலிருந்து நெருக்கமான பத்திரிகையாளர் நண்பர்கள் வழி கிடைத்துக் கொண்டிருந்த செய்திகள் வியப்பிலாழ்த்திய வண்ணம் உள்ளன.

ஈழத்திலிருந்தும் சிங்கள அரச தரப்பிலிருந்தும் இவை குறித்த எதுவிதமான மூச்சும் இல்லாதது செய்திகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பினாலும் தொடர்ந்து பல வட்டங்களில் விசாரித்ததில் இதுவரை அனைவரும் இச்செய்திகளை ஆமோதித்தே வருவதால் விஷயத்தை வெளியே கொண்டு வரும் நோக்குடன் இச்செய்திப் பதிவு.

இச்செய்திகள் உண்மையெனில் பிரச்சாரமெடுப்பது அவசியம் எனக் கருதியே எழுத வேண்டியாயிற்று.

1) நேற்று காலை கொழும்பு நகரில் வைத்து டக்ளஸ் தேவானந்தாவும் சிங்கள ஜனாதிபதி ராஜபக்சேவின் இளைய சகோதரர் ஃபாசிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

டக்ளஸ் குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அவரது இயக்க வலைப்பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. (காண்க: http://www.epdpnews.com/news.php?id=1983&ln=tamil) அது குறித்து குறிப்பிட்டு மீண்டும் விசாரித்ததில் அவரது மரணச் செய்தியை மீண்டும் பத்திரிகை நண்பர்கள் மிக உறுதிபடக் கூறினர்.

2) நேற்று இலங்கையில் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியுள்ளதாக ஒரு செய்தி.

இச்செய்தியையும் உறுதிப்படுத்த இயலவில்லை. எனினும், கொழும்புவில் உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் ஒருவருக்கும் ஒரு துளிச் செய்தியும் அரச தரப்பிலிருந்து மறுக்கப்பட்டு, அவர்கள் தங்கியுள்ள இடங்களிலிருந்து வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர் என்ற நேரடித் தகவல்கள் இச்சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

முதல் செய்தி உண்மையாக அமையும் பட்சத்தில் இரண்டாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

மேலும், முல்லைத் தீவில் சிங்கள இராணுவம் மிகக் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது என்பது வெளிவந்துவிட்ட போதும் இழப்பின் உண்மையான அளவு இன்னும் தெளிவாகவில்லை. முல்லைத் தீவு தவிர்த்து, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வன்னி பகுதிகளிலும் புலிகள் திடீரென கடும் தாக்குதல் தொடுத்திருப்பதும், அப்பகுதிகளில் சிங்கள இராணுவம் தயார் நிலையில் இல்லாதிருந்ததும் அங்கும் இராணுவத் தரப்பு இழப்புகள் கடுமையாக இருக்க வாய்ப்புண்டு என ஊகிக்க முடிகிறது.

இந்த எதிர்பாராத கடுமையான இராணுவ இழப்புகள் மட்டுமே இலங்கையில் சிங்கள இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவதற்கு போதுமானவை என்று சொல்ல இடமுண்டு.

இவற்றோடு முதற்சொன்ன இரண்டு சம்பவங்களும் உறுதிப்படுமானால், இலங்கையில் இராணுவ ஆட்சி சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கப்படாமல் நடைமுறைக்கு வந்திருக்க அதிக பட்ச வாய்ப்புண்டு.

இதன் பொருட்டே மிகக் கடுமையான செய்தித் தணிக்கையும் சிங்களப் பத்திரிகையாளர்கள் மீதேயான இதுவரையில்லாத நேரடி தாக்குதல்களும்.

இச்செய்தியை சர்வதேச சமூகத்தின் முன் வைத்து பிரச்சினையை எழுப்புவது உடனடி அவசியம்.

அத்துடன், போர்முனையில் இந்திய உளவு பிரிவினரும் இராணுவத்தினரும் நேரடியாக பங்குபெற்று வருவதாகவும் தகவல்கள்.

அதையும் சர்வதேச அளவில் பிரச்சினையாக எழுப்புவது உடனடி அரசியல் பணிகள்.

அனைவரும் தம்மாலானதைச் செய்வது மிக அவசியம்.

7 comments:

தியாகி said...

இதென்ன வர வர செய்திகளின் நம்பகத்தன்மை குறைந்துகொண்டே போகிறதே?? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்...என்ன தான் நடக்கிறது?

ஜெகதீசன் said...

என்ன நடக்குதுன்னே புரியமாட்டேன்னுது....
:((((

Emmanuel Dosan said...

is it true?
or only ur wishful fulfilment?
if true we have to celebrate

வளர்மதி said...

இத்தகவல்களை கூடியவரை பத்திரிகையாளர் நண்பர்கள் வழி கேட்டு உறுதி செய்தபின்னரே பதிவு செய்ய விழைந்தேன்.

எனினும், 'அதிகாரப்பூர்வ' தகவல்கள் வரும்வரை பொறுத்திருப்பது நல்லது.

நாளை விஷயங்கள் தெளிவாகிவிடும் என்று நம்பலாம்.

ஜோசப் பால்ராஜ் said...

செய்திகள் அனைத்தும் உண்மையாயிருக்க வேண்டும் என வேண்டுவோம்.
எதையும் உறுதிப்படுத்த இயலவில்லை. மிக்க குழப்பமாய் இருக்கிறது.

suran said...

நல்ல பதிவு... இன்னொரு விஷயம் தெரியுமா...எனது நண்பன் ஒரு பிரபல பத்திரிகையில் நிருபராக உள்ளான். அவன் சொன்னது....

" குமுதம் ரிப்போர்ட்டர், ஜு.வி இரண்டிலும் ஈழம் பற்றி தொடர் எழுதும் எழுத்தாளர்களிடம் சிங்கள அரசு சார்பில் பேசுகிறோம் என்று ஒரு தொலைபேசி. எவ்வளவு வேண்டும்? புது வீடு வேண்டுமா? தொடரை நிறுத்துங்கள் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். பிறகு தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்கவில்லை.

கல்மடு குளம் உடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எவளவு என்று தெரியவில்லை. அதை மறைபதற்கே சிங்கள அரசு பத்திரிகைகளையும் வளைத்துள்ளது. இலங்கையில் துப்பாக்கி காட்டி மிரட்டியும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் பணத்தை காட்டி கெஞ்சியும் புலி ஆதரவு அல்லது ஈழ தமிழர் ஆதரவு செய்திகளை போடக் கூடாது என்று கெஞ்சி உள்ளார்கள். தினமும் இலங்கை தூதரகத்தில் பத்திரிக்கை, அரசியல் வாதிகளுக்கு பார்ட்டி நடக்கிறது.

மேலும் அந்த பாரம்பரிய என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கை, டெலிகிராம் பத்திரிக்கை பற்றியும் ஒரு செய்தி சொன்னான். // திடீர் instruction from management. நேற்று வந்துள்ளது. அதாவது புலி ஆதரவாகவோ ஈழ தமிழர் ஆதரவாகவோ செய்தி எந்த தலைவர் அல்லது யார் கொடுத்தாலும் போடக் கூடாது என்பதாம். //

அதனால் தான் இன்று எல்லா பத்திரிகையும் தமிழோசை தவிர அந்த செய்திகளை தவிர்த்துள்ளன.

திரு said...

நல்ல அவதானம். சிங்கள அரசு ஒரு சர்வாதிகார அரசாக மாறிவிட்டது. வரும் காலங்களில் தென்னிலங்கையில் சிங்களவர்களுக்கும் அதன் தாக்கம் கனமாக இருக்க வாய்ப்புண்டு.

Post a Comment

Recent Posts