Dec 24, 2008

ரங்கநாத்தின் பேட்டி முதன் முறையானதல்ல

குமுதம் ரிப்போர்ட்டர் நேற்று வெளியிட்ட ஜெ. ரங்கநாத்தின் பேட்டியில் அவர் தெரிவித்திருக்கும் விஷயங்கள் பலவும் அவ்விதழ் கூறிக்கொள்வது போல ‘முதல் முறையானது' அல்ல (சோனியா காந்தியும் அவரும் பேசியது இதுவரையில் எந்த இதழி்லும் வரவில்லை என்பதையே இப்படி தந்திரோபாயமாக எழுதியிருக்கிறார்கள்) .

1999 - ஆம் வருடமே ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி சிறையிலிருந்து வெளியானவரிடம் ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு “படுகொலை குறித்த அனைத்து விவரங்களையும், சிவராசனுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பதையும் பத்திரிகைகளுக்குச் சொல்லிவிடப் போவதாக
மிரட்டினார்” (அழுத்தம் எனது) என்று ஃப்ரண்ட் லைன் பத்திரிகையாளர் டி. எஸ். சுப்பிரமணியன் எழுதுகிறார்.

("Are you happy?" a reporter asked Subha Sundaram, one of those acquitted, as he stepped out of the Chennai Central Prison on May 12 evening. "After years of suffering and jail life, will I not be happy?" he answered. J. Ranganath, also released from the same prison, said, "I am bitter even though I know I am through." Ranganath threatened to reveal everything to the press including the "motive" behind the assassination and who financed Sivarajan, leader of the LTTE's assassination cell. He said the motive was to create a "political vacuum" in the country. http://www.hinduonnet.com/fline/fl1611/16111060.htm)

அடுத்து இவரது விரிவான பேட்டி The Week - June 6, 1999 இதழில் வந்துள்ளது.
அந்த பேட்டியை முன்வைத்து சச்சி சிறீ காந்தா தனது நூலின் அத்தியாயம் ஒன்றில் எழுதியிருப்பவை இங்குள்ளது: http://www.tamilnation.org/forum/sachisrikantha/vp/vp32.htm (அச்சு இதழைத் தேடியெடுத்து ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.)

ராஜீவ் காந்தி கொலை குறித்த அரசின் பிரச்சாரங்கள், புலனாய்வு பூதாகரங்கள் மீது என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை எனக்கு. அதனால் அவற்றை முற்றிலுமாக அசட்டை செய்வது வழக்கம்.

குமுதம் ரிப்போர்ட்டர் “முதன் முதலாக” ரங்கனாத்தின் ரகசிய சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ளதாக தம்பட்டமடித்துக் கொண்டாலும் (ஒருவேளை இது மொத்தமே முன் குறிப்பிட்டுள்ள பேட்டியை தன் வசதிக்கேற்ப - வியாபாரத்திற்காக ரீசைக்கிள் செய்துகொள்ளும் உத்தியோ என்ன கண்றாவியோ!) மீண்டும் ஒருமுறை ராஜீவ் கொலையை பொதுக்களத்திற்கு கொண்டு வந்திருப்பதை (அதுவும் வியாபார உத்தியாக இருக்கலாம். வேறு இதழ்களோ மற்ற ஊடகங்களோ இதை சட்டை செய்யவில்லை என்பதும் இப்படி யோசிக்க வைக்கிறது) சிவில் சமூகத்தில் ஊறியிருக்கும் பொது அபிப்பிராயத்தை மாற்றும் நோக்கில் முன்னெடுக்கலாமா என்பது யோசனை.

கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, ('முதன்முறையாக' வந்துள்ள புதிய செய்தி என்று நம்பி) அவசரப்பட்டு என் தனிப்பட்ட வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு நேற்று இதற்காக ஏகப்பட்ட நேர விரயம்.

என்றாலும், இன்றும் தொடர்ந்து இச்செய்தியைத் துரத்தியதில் இதுவரை கவனிக்கத் தவறிய பல விசயங்கள் கவனத்துக்கு வந்தன என்பதில் மகிழ்ச்சியே.

இன்னும் சில நூல்களுக்காக காத்திருக்கிறேன்.

சில சிறு நூல்களை மொழியாக்கம் செய்யும் திட்டம் ஒன்றையும் நண்பர் ஒருவர் முன்மொழிந்துள்ளார்.

2 comments:

வால்பையன் said...

நம் நாட்டில் உளவுதுறை உண்மையிலேயே இருக்கிறதா?

ஈரோட்டில் ஒரு இன்ஸ்பெக்டர் காணாமல் போய் 10 வருடம் ஆகிறது, இன்று வரை தகவல் இல்லை.

ராஜிவ் கொலை வழக்கு இன்னும் முடிவு பெறாதா சிக்கலாகவே இருக்கிறது.

ஒரு ஜோக்கில் படித்தேன்.
வெளிநாட்டில் ப்புலியை பிடிக்க சொன்னால், சுட்டு கொன்று விடுவார்களாம்.

நம் நாட்டில் பூனையை பிடித்து புலியென்று ஒத்து கொள் என மிரட்டுவார்களாம்.

உண்மையில் நமது காவல்துறையில் அது தான் நடக்கும் போல!

ஊழல் அழியாத வரை நமது முப்பேரன் காலத்திலும் நாடு உருப்படாது!

வளர்மதி said...

வால்பையன்,

நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜோக் இந்தியாவிற்கு மட்டுமல்ல ஐரோப்பிய/அமெரிக்க அரசுகளுக்கும் பொருந்தக்கூடியதே.

நம் நாட்டில் மட்டும் அது நடக்கிறது என்று சொல்வது, “வெள்ளைக்காரன் காலத்துல எல்லாம் நல்லா இருந்துச்சுப்பா” என்று தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் வாயாடிய காங்கிரஸ் கிழங்களின் மனநிலைக்கு ஒத்ததா என்று யோசிக்க வேண்டுகிறேன்.

இந்திய உளவுத்துறை நிறுவனங்களின் அழிச்சாட்டியங்கள் தெற்காசியப் பிராந்தியத்தில் எண்ணிலடங்காதவை.

ஊழலுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

நன்றி.

Post a Comment

Recent Posts